இந்திய-சீன விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் முன்வைத்த 7 கேள்விகள்! - Seithipunal
Seithipunal



சீனப் படைகள் ஊடுருவல் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு, பாஜகவின் பல தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய-சீன விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பாஜக தரப்பிற்கு 7 கேள்விகளை முன்வைத்துள்ளது. அதில், 

* 2020 ஜூன் 20 ஆம் தேதி கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்று ஏன் சொன்னீர்கள்?

* 2020 மே 2 ஆம் தேதிக்கு முன்பு வழக்கமாக ரோந்து செல்லும் கிழக்கு லடாக்கின் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பகுதியில், நமது படைகள் நுழைவதைத் தடுக்க சீனப் படைகளை எதற்கு அனுமதித்தீர்கள்?

* 2013 ஜூலை 17ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய ராணுவ வீரர்கள் மலையை முற்றுகையிடும் திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள்?

* சீனாவிடம் இருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு ஏன் நன்கொடை பெற்றீர்கள்?

* கடந்த இரு ஆண்டுகளாக சீனப் பொருள்கள் இறக்குமதியை ஏன் அதிகரித்தீர்கள்? 

* எல்லை பாதுகாப்பு மற்றும் சீனாவால் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஏன் மறுக்கிறீர்கள்? 

* இதுவரை 18 முறை பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்துள்ளார். அண்மையில் பாலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் கைகுலுக்கினீர்கள். அடுத்த சிறிது நேரத்தில் தவாங் பகுதியில் ஊடுருவிய சீனா, எல்லைப் பகுதியை மாற்றியமைக்க முனைந்தது. ஏன் நாட்டை உறுதியான நிலைக்கு இட்டுச் செல்லவில்லை?" என்று 7 கேள்விகளை முன்வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India China border issue Congress Vs BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->