ஜப்பான் பிரதமருடன் பேச்சு வார்த்தை.! இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த இந்தியா முடிவு.!
India Japan decided to improve security ties between themselves
அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ‘2+2’ உயா்நிலை பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனர்.
இதையடுத்து ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முடிவுகள் குறித்து கலந்துரையாடினர்.
இந்நிலையில் ஜப்பானின் எதிர் தாக்குதல் நடத்தும் நவீன ராணுவ திட்டங்களுக்கு இந்தியா சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட நிலையில், இந்த திட்டங்கள் இந்தியா பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவை தடுக்கும் வியூகமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியா-பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வதில் ஜப்பான் மற்றும் இந்தியா ஒரு முக்கியமான பங்களிப்பைக் கொண்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
India Japan decided to improve security ties between themselves