பொருளாதாரத்தில் முன்னேற்றம்; முன்னணி நிலையை தக்கவைத்துக்கொள்ளும் இந்தியா - ரஷ்யா தூதர் பேட்டி! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரால், இந்தப்  போரை தவிர்ப்பதற்காக, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவும், ஐரோப்பிய நாடுகளுக்கு தனது எரிவாயு சப்ளையில் தாமதம் காட்டி மறைமுகமாக பழிவாங்குத்தலில்  ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று ரஷ்யா, எங்களது மிக பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது என்றும் அதன்வழியே போதிய வர்த்தகம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. இது அமெரிக்கா போன்ற நாடுகளின் தடையை நீர்த்து போக செய்யும் வகையில் பதிலாக அமைந்தது. 

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பற்றிய கேள்விக்கு இந்தியாவுக்கான ரஷ்யா தூதர் டெனிஸ் அலிபோவ் செய்தியாளர்களிடம் இன்று தெரிவிக்கும்போது, ஐரோப்பிய நாடுகளுடன் பாரம்பரியம் ஆக வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், அதன் தடை எதிரொலியாக புதிய சந்தைகளை ரஷ்யா எதிர்பார்க்கிறது. 

இந்தியா ஒரு நுகர்வோராக, மிக குறைந்த விலையிலான சலுகைகளை இயல்பாகவே எதிர்பார்க்கிறது. இந்த துறையில் எங்களுடைய நல்லுறவை தொடர்ந்து விரிவாக்க முயன்று வருகிறோம். நீண்டகால ஏற்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தொடர்ந்து நடந்து வரும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவித்து இருதரப்பு உறவுகளை விரிவாக்கம் செய்து வருகிறோம். 

ரஷ்யா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள், முன்னணி நிலையை தக்க வைத்து கொள்வதற்காகவும், தனித்துவமுடன் இருப்பதற்காகவும் உலக பொருளாதாரத்தில் மேற்கத்திய நாடுகளை விட சிறந்த முறையில் முன்னேற தொடங்கியுள்ளது என்று ரஷ்யா தூதர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india next level in economic


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->