உக்ரைன் - ரஷ்யா மோதலால் உலக அளவில் போர் அபாயம்.. இந்திய தூதர் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இன்று காலை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று உக்ரைன் உள்ளே சென்று ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்புகுந்து ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

ரஷ்யா உக்ரைனில் வான்வெளி தாக்குதல், ராணுவ தாக்குதல் என இரண்டையும் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால், அங்கு பெரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று அதிகாலை தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் இன்று அதிகாலை உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து,  உக்ரைன் தலைநகர் கியூ மீது ரஷ்ய படைகள் குண்டு மழை தாக்குதல் நடத்தி உள்ளது. மேலும், உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், உக்ரைனில் பதட்டம் நிலவுகிறது.

இதையடுத்து, ரஷ்யாவிற்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவின் 5 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், உக்ரைன் ராணுவத்தின் தகவலுக்கு ரஷிய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல் மட்டுமில்லாமல் சைபர் தாக்குதலை தொடுத்துள்ளது ரஷ்யா. உக்ரைனை சேர்ந்த அரசு இணையதளங்களை முடக்கி முக்கிய தகவல்களை ரஷ்யா ஆழ்ந்துள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மாபெரும் பிரச்சனைக்கு வித்திடும் என ஐநாவின் இந்திய தூதர் திருமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உக்ரைன் - ரஷ்யா மோதலால் உலக அளவில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது என திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian ambassador warning russia ukrainian attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->