சான் பிரான்சிஸ்கோ : கோல்டன் கேட் பாலத்தில் இருந்து குதித்து இந்திய சிறுவன் தற்கொலை - Seithipunal
Seithipunal


சான்பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலத்தில் இருந்து குதித்து இந்திய சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கோல்டன் கேட் என்ற புகழ்பெற்ற பாலம் 1937இல் திறக்கப்பட்டது. இந்த பாலம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 2000 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் 16 வயதான அமெரிக்காவை சேர்ந்த இந்திய சிறுவன் நேற்று மாலை 4:58 மணியளவில் இந்த கோல்டன் கேட் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பாலத்தில் இருந்து சிறுவனின் சைக்கிள், போன், பை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பாலத்தில் இருந்து ஒருவர் குதிப்பதைக் கண்ட கடலோரக் காவல்படையினர் சுமார் 2 மணி நேரம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து சமூகத் தலைவர் அஜய் ஜெயின் பூடோரியா, இந்திய அமெரிக்கர் ஒருவர் கோல்டன் பிரிட்ஜில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது இது நான்காவது சம்பவம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Boy Jumps To Death From San Francisco Golden Gate Bridge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->