இந்திய நிதியுதவியில் 4 மில்லியன் இலங்கை மாணவர்களுக்கு பாட புத்தகங்கள்.!! - Seithipunal
Seithipunal


பணவீக்கம், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து, கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பொருளாதார உதவிகள் அளித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியா வழங்கிய பொருளாதார நிதியில், இலங்கை மாணவர்களுக்கு 40 லட்சம் பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உணவு, எரிபொருள், மருந்துகள் வாங்குவதற்கும், பாதுகாப்புத்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை மேம்படுத்துவதற்கும் கடந்த ஆண்டு இலங்கைக்கு 8000 கோடி கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியில் 80 கோடிக்கும் அதிகமான தொகையை பாட புத்தகங்களை அச்சிடுவதற்காக இலங்கை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 லட்சம் மாணவா்களுக்கான 45 சதவீத பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வரும் நிலையில், புத்தகங்கள் 2023 கல்வியாண்டிற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவி வருவதாகவும், இதுவரை 32000 கோடி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian financial aid to buy textbooks for 4 million students in srilanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->