இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு!...இது தான் காரணமா?
Indian for companies america economic prohibition is this the reason
அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாவது, ரஷிய ராணுவம் மற்றும் அங்கு உள்ள தொழில் துறைக்கு தேவையான மின்னணு சாதனங்கள், தொழில்நுட்பங்கள் மூன்றாம் தரப்பு நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த மஸ்க் ட்ரான்ஸ், டிஎஸ்எம்டி குளோபல், அசென்ட் அவிடேசன் அண்டியா, புயூடிரிவோ ஆகிய நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருட்களை அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவின் அசென்ட் அவிடேசன் நிறுவனம் ,ரஷிய நிறுவனங்களுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமான உதிரிபாகங்களை அனுப்பி உள்ள நிலையில், இவை அமெரிக்க தயாரிப்பு உதிரி பாகங்கள் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல் இந்தியாவை சேர்ந்த மஸ்க் டிரான்ஸ் நிறுவனம் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான சி.எச்.பி.எல். பொருட்களை ரஷிய நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ளதால், இந்தியாவில் உள்ள இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த நிறுவனங்களால் இனிமேல் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பொருட்களை வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
English Summary
Indian for companies america economic prohibition is this the reason