துபாயிலிருந்து தக்காளி வாங்கி வந்த இந்திய பெண்.! - Seithipunal
Seithipunal


விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு தக்காளி கொண்டு வந்த பெண்.!

கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். 

இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். 

இந்த நிலையில், துபாயில் வசித்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரேவ் என்ற பெண் செல்போனில், தனது தாயாரிடம் ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் என்ன பொருட்கள் வாங்கி வர வேண்டும் எனவும் கேட்டார். 

அதற்கு அவரது தாயார் இந்தியாவில் தக்காளி விலை அதிகமாக உள்ளது. ஆகவே, 10 கிலோ தக்காளியை கொண்டு வர வேண்டும் என்றுத் தெரிவித்தார். அதன் படி ரேவ் துபாயில் உள்ள காய்கறி கடையில் 10 கிலோ தக்காளியை வாங்கி, அதனை பாதுகாப்பாக அட்டை பெட்டியில் அடைத்தார். 

இதையடுத்து ரேவ் விமானத்தில் தக்காளியை மும்பைக்கு கொண்டு வந்தார். இது குறித்து இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், "அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் அதன் விதைகள் கொண்டு செல்வதில் சில கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. அதனை பின்பற்றி பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian woman ten kg tomatto buy from dubai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->