அரபு நாடுகள் வெள்ளத்தில் மூழ்க இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Info UAE HeavyRain floor reason cloud seeding
வலைக்குள்ள நாடுகளில் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக உள்ளன. கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ள இந்த நாடுகளில் மழை என்பது மிகவும் அரிதானது. அதுவும் குளிர் காலங்களில் சில நாட்கள் மட்டுமே மழை பெய்யும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பகரின் கத்தார் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடல் நீரை குடிநீராக்கி தண்ணீர் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்க இந்த நாடுகள் அடிக்கடி மேக விதைப்பு முறை மூலம் சேர்க்கை மழையை உண்டாக்கி வருகின்றன. அரபு நாடுகளில் வழக்கமாக ஓராண்டுக்கு 9.47 சென்டி மீட்டர் மழை தான் பெய்யும். ஆனால் கடந்த ஏப்ரல் 16ம் தேதி வழக்கத்தை விட அதிகப்படியான மழை பெய்துள்ளது.
இரவு நேரத்தில் தொடங்கிய மழையானது 24 மணி நேரத்தில் 14.2 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டி தீர்த்துள்ளது. குறிப்பாக துபாய் விமான நிலையம் ஒட்டி உள்ள பகுதியில் அதிக மழை கொட்டியதால் விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரபு நாடுகளில் திடீரென பெய்த கனமழைக்கு காரணம் செயற்கை மழை முயற்சி தான் என கூறப்படுகிறது.
அதிக மழை பெய்யாததால் ஐக்கிய அரபு நாடுகளில் மழைநீர் வடிகால் வசதி கிடையாது. இதனால் ஒரே நாள் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
ஓமனில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளி பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதிலிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
English Summary
Info UAE HeavyRain floor reason cloud seeding