விண்ணுக்கு அனுப்பப்பட்ட விலங்குகள்: ஈரானின் அடுத்தகட்ட சாதனை!
Iran Animals sent space
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரான் தற்போது விலங்குகளை கொண்ட ஒரு விண்கலனை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விண்கலம் சுற்றுவட்ட பாதையில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிற்கு அனுப்பப்பட்டதாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
500 கிலோ எடை கொண்ட இந்த விண்கலனில் என்ன விலங்குகள் எத்தனை விலங்குகள் அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 2013ஆம் ஆண்டு ஈரான் விண்கலன் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்கு சென்று வர செய்ததாக தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் செயற்கைக்கோள் ஒன்றினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகவும் தெரிவித்தது. மேலும் விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது