ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஈரான் செயற்கைக்கோள்.!
Iran launches Khayyam satellite through Russian rocket
ஈரானுக்குச் சொந்தமான உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா பொருத்தப்பட்ட 'கயாம்' செயற்கைக்கோள் கஜகஸ்தானில் உள்ள பைக்கானுர் ஏவுதளத்தில் ரஷ்ய ராக்கெட் சோயுஸ்-2.1 பி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் ஈரான் மற்றும் ரஷ்யாவின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக செலுத்தப்பட்டுள்ளது என இரு நாடுகளும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஈரானின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இந்த செயற்கைக்கோள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செயற்கைக்கோள் மூலம் உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளையும், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ இலக்குகளை கண்காணிக்க இயலும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Iran launches Khayyam satellite through Russian rocket