ஹிஜாப்பிற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் அயல் நாட்டின் சதி - ஈரான் தலைவர் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ஈரானில் ஹிஜாப்பை முறையாக அணியவில்லை என்று போலீசார் தாக்கியதில் குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த மாஷா சுமினி என்ற பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து நாடு முழுவதும் அரசுக்கு எதிராக பெண்கள், ஆண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஹிஜாப்பை எதிர்த்தும், தலைமுடியை வெட்டியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் வன்முறை மற்றும் போராட்டத்திற்கு எதிராக ஈரான் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஹிஜாப்பிற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் ஈரானின் அமைதி சீர்குலைக்க நடக்கும் வெளிநாட்டின் சதி என்று ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் மாஷா அமினி உயிரிழந்ததை அறிந்து மனம் வருந்தியதாகவும், அவரின் இழப்பு மிகவும் துயரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் இதை பயன்படுத்தி போராட்டங்களை தூண்டி விடுவதாகவும் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran leader accuses other countries for protest against hijab


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->