பேச்சுவார்த்தையில் தீர்வு; காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி; - Seithipunal
Seithipunal


​இஸ்ரேல் - ஹமாஸ் போர் 15 மாதங்களுக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். 

இதன் முதற்கட்டமாக 03 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 04 இளம் இஸ்ரேல் பெண் பணயக் கைதிகளை நேற்று முன்தினம் விடுதலை செய்தது. 
இதனை தொடர்ந்து,  அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. ஒப்பந்தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

அதன்பின்னர் நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு கட்டமாக அர்பெல் யஹூட் உட்பட 06 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலாய் செய்ய முடிவு எட்டப்பட்டதை  தொடர்ந்து, வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை பாலஸ்தீனியர்கள் நெட்சாரிம் பாதை வழியாக கால்நடையாக கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதை போரின் போரின் ஆரம்பத்தில் இஸ்ரேல் உருவாக்கிய ராணுவ மண்டலமாகும். குறித்த பாதை வழியாக காசாவின் வடக்கு பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் திரும்பியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel allows Palestinians to return to Gaza after negotiations


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->