நிலி படையுடன் வேட்டைக்கு தயாராகும் இஸ்ரேல்! பதறும் ஹமாஸ் அமைப்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது. எதிர்பாராத நேரத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வ போரை பிரகடனம் செய்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். 

16வது நாளாக தொடரும் இந்தப் போரில் தற்போது வரை சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலை அடுத்து இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

இதற்கிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்த நிலி என்ற சிறப்பு படையை இஸ்ரேல் ராணுவம் உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீப்ரு மொழியில் நிலி என்றால் "லட்சியம் பொய்க்காது" என்று பொருளாகும்.

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியதில் அங்கம் வகித்த ஒவ்வொரு ஹமாஸ் அமைப்பினரையும் வேட்டையாடுவதற்கு இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. 

ஹமாஸ் அமைப்பில் இருக்கும் நுக்பா என்ற சிறப்பு கமாண்டோ பிரிவை ஒட்டுமொத்தமாக வேட்டையாடுவதே இந்த படையில் முதல் செயல் திட்டம் என கூறப்படுகிறது. இஸ்ரேலின் உளவுபிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் சிறப்பு ராணுவ கமெண்டோக்கள் இந்த படையில் இணைக்கப்பட்டுள்ளதால் ஹமாஸ் போன்றே கொரில்லா தாக்குதலை நிலி அமைப்பும் நடத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel army formed nili special unit against Hamas


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->