இஸ்ரேல் தாக்குதல்: காசா பூங்காவில் விலங்குகள் பசியால் உயிரிழக்கும் அவலம்!
Israel attack Gaza Park animals die hunger
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் கடும் பசியில் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 80 நாட்களுக்கும் மேலாக காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பல்வேறு பகுதிகள் உருக்குலைந்து காணப்படுகிறது.
இதனால் அங்குள்ள உயிரியல் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விலங்குகளுக்கு சரியான உணவு அளிக்க முடியாத காரணத்தினால் 4 குரங்குகள் உயிரிழந்துள்ளது.
மீதமுள்ள குரங்குகளுக்கும் பசியால் மிகுந்த சோர்வுடன் காட்சியளிக்க, பூங்காவில் முகாமிட்டு தங்கி இருக்கும் பொதுமக்கள் அதற்கு உணவு கொடுத்து வருகின்றனர்.
கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கம் மற்றும் அதன் குட்டிகளுக்கும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே உணவு அளிக்கப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் சிங்கக்குட்டிகள் உயிரிழந்த விடும் என பூங்கா நிர்வாகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது அருகில் உள்ள பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை விலங்குகளுக்கு உணவாக அளிப்பதாகவும் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Israel attack Gaza Park animals die hunger