ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்.. பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.!
Israel counter attack on Israel
கடந்த பல மாதங்களாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த வரும் நிலையில் மத்திய கிழக்கின் நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரவேலுக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில் ஈரான் உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது போர் தொடுத்து வந்தன.
கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பல முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இரவு சுமார் 800-க்கும் மேற்பட்ட இயவுகணை மற்றும் தோள்களை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை ஈரான் ராணுவம் கனகச்சிதமாக முறியடித்த நிலையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் உலக நாடுகளுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பொருளாதார தடை விதித்தது.
இதற்கிடையே நேற்று வரை மௌனம் காத்து வந்த இஸ்ரேல் தற்போது ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஈரான் நாட்டு விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த எதிர் தாக்குதல் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமாக கூடும் என உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.
English Summary
Israel counter attack on Israel