உலக நாடுகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும்.!!
Israel minister said gaza war will continue without World nations support
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் இந்த போரால் வடக்கு காசா முழுவதும் நிலைகுலைந்துள்ளது.
தற்போது தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை இந்த போர் ஓயாது என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் இந்த சூழலில் பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கூட கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேவேளையில் ஹமாஸ் அமைப்பின் வசம் இருக்கும் பிணைய கைதிகள் முழுவதுமாக மீட்கப்படாமல் உள்ளனர்.
உலக நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வரும் நிலையில் ஐநா சபையில் போர் நிறுத்த தீர்மானம் இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டபோது அமெரிக்கா தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இருப்பினும் ஐநா சபையின்பெரும்பாலான உறுப்பு நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் இஸ்ரேலுக்கு போர் நிறுத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில் சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் நாட்டிற்கான வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிரான போர் தற்போது நிறுத்தப்பட்டால் இது அவர்களுக்கு பரிசாக அமைந்து விடும். மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அனுமதி வழங்கியது போல அமைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோப் சல்லிவன் இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் நேத்தன்யாகுவை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Israel minister said gaza war will continue without World nations support