400க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த இஸ்ரேல்! அலறும் ஹமாஸ் அமைப்பு.. வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென எவுகனை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் நஹால் படைப்பிரிவின் தளபதி ஜொனாதன் ஸ்டெய்ல் பெர்க் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு காணொளி வாயிலாக பேசிய இஸ்ரேல் பிரதமர் தற்போது போர் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். மேலும் தாக்குதல் தொடர்ந்தால் பாலஸ்தீனம் முழுமையாக தரமட்டமாகும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையே தற்போது காசாவில் உள்ள ஹமாஸ் உளவு பிரிவு தலைவர் வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இடம் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பில் ராணுவ மையமாகவும் செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. 

இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதட்டமான சூழல் நிலவி வருவதால் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனம் அந்நாடுகளுக்கான  தனது விமான சேவையையும் முழுமையாக ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel reports 400 Palestinians terrorist have died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->