ஹமாஸ் அமைப்பினரை போட்டு தள்ளிய இஸ்ரேல்! பிணைய கைதிகளை மீட்கும் பரபரப்பு வீடியோ!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேலுக்கும் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 20வது நாளை எட்டியுள்ள நிலையில் இரு தரப்பிலும் சுமார் 8,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஃபா எல்லையை திறக்க வலியுறுத்தி பாலஸ்தீனியர்கள், அரபு நாடுகள், இஸ்லாமியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு காரணம் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழி தாக்குதலை தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பின் பதுங்கு குழிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஹமாஸ் அமைப்பு பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த சூழலில் கிப்பட்ஸ் பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேலிய பிணை கைதிகளை இஸ்ரேலிய ராணுவம் மீட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திய இஸ்ரேலியா ராணுவ வீரர்கள் அவர்களை சுட்டு வீழ்த்தி பிணை கைதிகளை பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் பிணைய கைதிகளை மீட்டுச் செல்லும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israeli army shoots dead Hamas and rescues hostages


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->