எலான் மஸ்க்கை பின்பற்றி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனங்கள் - தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்! - Seithipunal
Seithipunal



SpeceEX மற்றும் Tesla  நிறுவனங்களின் CEO ஆன எலான் மஸ்க் , கடந்த 2022ம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தகுதி இல்லை என்று கூறி 80 சதவீத பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பினார்.

இதையடுத்து உலகின் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்ந்த ட்விட்டர் நிறுவனமே தனது பணியாளர்களை பணி நீக்கம் செய்து விட்ட நிலையில், நாமும் இந்த ட்விட்டர் பார்முலாவை பின்பற்றுவோம் என்று பெரும்பான்மையான தொழில் நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து அனுப்பினர்.

கூகுள் , அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே ட்விட்டரின் வழியையே பின்பற்றினர். 2022ம் ஆண்டு மட்டும் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோரை இந்நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இதையடுத்து வேலை வாய்ப்பு எண்ணிக்கை பெருமளவில் குறைய தொடங்கியது.

இந்நிலையில் எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கை தான் மற்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், அமேசான் ஆகியவற்றின் பணி நீக்க நடவடிக்கைக்கும் காரணம். மற்ற பிரபல நிறுவனங்கள் அனைத்தும் பணி நீடிக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தியதே எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தை முழுவதுமாக விலைக்கு வாங்கி, பின்னர் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியதற்கு பின்னர் தான் என்று ஒரு தனியார் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT Companies Following Elon Musk on Recession


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->