உக்ரைன் மீதான தொடர் தாக்குதல்! ரஷ்ய கப்பல்களுக்கு இத்தாலி மற்றும் பல்கேரிய நாடுகள் தடை.!
Italy and Bulgaria banned Russian ships
ரஷ்ய நாட்டு கப்பல்கள் தங்கள் நாட்டு துறைமுகங்களுக்குள் நுழையும் அனுமதி ரத்து செய்யப்படுவதாக இத்தாலி மற்றும் பல்கேரிய நாடுகள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 50 நாட்களை கடந்து நீடிக்கிறது. ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதில் மேலும் ஒரு நடவடிக்கையாக இத்தாலி மற்றும் பல்கேரிய நாடுகள் தங்கள் நாட்டு துறைமுகங்களில் ரஷ்யா நாட்டு கப்பல்கள் வருவதற்கு தடை விதித்துள்ளன.
மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள், உணவு மற்றும் மருந்து பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லும் கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் பல்கேரியா தெரிவித்துள்ளது.
English Summary
Italy and Bulgaria banned Russian ships