இத்தாலி: நடுக்கடலில் சிக்கித் தவித்த 211 அகதிகள்.! பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் துனிசியா, லிபியா, துருக்கி மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்திற்காக இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றன. இதில் கடந்த சில மாதங்களாக மோசமான வானிலையால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் படகுகள் கவிழ்ந்து அகதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று இத்தாலியின் லம்பேடுசா தீவு பகுதியின் அருகே வானிலை காரணமாக மீன்பிடி படகில் சென்ற 211 அகதிகள் நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர், நடுக்கடலில் சிக்கி தவித்த 211 அகதிகளை பத்திரமாக மீட்டனர்.

இது தொடர்பாக கடலோர காவல் படையினர் கூறும்பொழுது, இத்தாலியின் தெற்கு கடலோரப் பகுதியில் அகதிகள் படகு தத்தளிப்பதை பற்றி தகவல் அறிந்ததும், விரைந்து சென்று 2 ரோந்து படகின் மூலம் அகதிகள் மீட்கப்பட்டதாகவும், அதில் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலி கடல்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து 68 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy coast guard rescued 211 refugees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->