இத்தாலி : அகதிகள் படகு கவிழந்து விபத்து..‌ 27 பேர் நீரில் மூழ்கி பலி.! - Seithipunal
Seithipunal


துனிசியாவிலிருந்து இத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

துனிசியா நாட்டிலிருந்து இத்தாலிக்கு சென்ற 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக சென்றுள்ளனர். அப்போது திடீரென அதிவேக காற்று வீசியதால் படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்தன. இதில் அகதிகள் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் துரித மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில்  27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிய 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

மேலும், மற்ற அகதிகளின் நிலை என்ன என்பது தெரியாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. மேலும் மற்றவர்களை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy refugees boat Accident 27 death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->