நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத செய்தி வாசிப்பாளர்.! துக்கம் தொண்டையை அடைத்த சோகம்.!
japan news reader cry ukrain
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய நாடு போர் தொடுத்தது. இந்தப் போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகிலுள்ள புச்சா நகர்ப்பகுதியில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகும், ஏராளமான குடிமக்கள் கொல்ல படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயத்தில் உக்ரைனில் உள்ள புச்சா நகரின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான செய்தி தொகுப்பினை, ஜப்பானில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புச்சா நகரில் நடந்துள்ள படுகொலை தொடர்பான செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ மச்சுவோ, நேரலையில் செய்தி வாசிக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார்.
சில நொடிகளுக்குப் பிறகு யூமிகோ மட்சுவோ, செய்தி வாசிப்பினை தொடர்ந்தார். இந்த செய்தி தொகுப்பின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
English Summary
japan news reader cry ukrain