வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த ஜப்பான்.! - Seithipunal
Seithipunal


தீவு நாடான ஜப்பான் நாட்டின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் என்ற விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 6-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இருப்பினும் இந்த ஆண்டு நிலவில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சி செய்தது.

தற்போது, லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி இருந்தாலும், இந்த விண்கலம் தனது செயல்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jappan country lunar landar reached moon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->