காதலனுடன் உல்லாசமாக இருக்க.. செத்து செத்து விளையாடிய இன்ஸ்டா பிரபலம்.! விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!  - Seithipunal
Seithipunal


ஜெர்மனியை சேர்ந்த 23 வயது மாடல் அழகி ஷஹ்ரபான் என்பவருக்கு ஏற்கனவே திருமண முறிவு ஏற்பட்ட நிலையில் தற்போது 24 வயது இளைஞர் சாகீர் என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தன் மாஜிக் கணவரை பார்க்கப் போவதாக கூறிவிட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாடல் அழகி காரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில் முகம் சிதைந்த நிலையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடந்தது. அது அந்த மாடல் அழகி ஷஹ்ரபான் போலவே அச்சு அசலாக இருந்தது. இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

ஆனால் உடற்குறு ஆய்வில் இது மாடல் அழகி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்து போனதும் ஒரு 23 வயது மாடல் அழகி தான் என்பதும் அவரது பெயர் கதீஜா என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து பல மாதங்கள் விசாரணை நடந்ததில் ஷரபான் தனது காதலனுடன் உல்லாசமாக இருக்க எண்ணியுள்ளார்.

எனவே, இறந்து போனதாக நாடகம் ஆட கதீஜாவை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்து நட்பாக பேசி பரிசு பொருட்களை அனுப்பி நேரில் பார்க்கச் சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். அதன் பெயரில் கதீஜா வந்த நிலையில் அவரை கொலை செய்து முகத்தை 50 முறை கத்தியால் குத்தி சிதைத்து அந்த உடலை காரில் போட்டுவிட்டு அங்கிருந்து காதலனும் ஷஹ்ரபாணும் தப்பித்து ஓடி உல்லாசமாக வாழ்ந்து வந்தனர். என்பதை தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து சஹ்ரபான் மற்றும் அவரது காதலன் சாகீர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jerman Model Cheat Family and Murder One women


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->