தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் - சீனா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனா அதிபர் ஜின் பிங்கை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தைவான் தொடர்பான விவகாரங்களை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேசியுள்ளனர்.

இது இரு தலைவர்கள் இடையே நடைபெறும் ஐந்தாவது உரையாடலாகும். இந்நிலையில் சீனாவில் முஸ்லிம் மீதான கடும் அடக்குமுறை ஒரு இனப்படுகொலை என்று ஜோ பைடன் சீனாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்றும், நெருப்புடன் விளையாடுபவர்கள் இறுதியில் எரிந்து போவார்கள் என்று அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

மேலும் தைவான் விவகாரத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு சீரானது. இதையடுத்து சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியாகப் பாதுகாப்பது 1.4 பில்லியனுக்கும் அதிகமான சீன மக்களின் உறுதியான விருப்பம் என்று சீனா அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe biden held talk with xi jinping over Taiwan issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->