அமெரிக்கா: இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இந்து கோவில்களை சிதைத்தும், இந்தியா மற்றும் மோடிக்கு எதிரான வாசகங்களை எழுதியும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர. மேலும் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் சந்து, தலைமறைவானதை தொடர்ந்து காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் குழு, இந்தியர்கள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி வன்முறையை தூண்ட முயற்சித்தனர்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சந்து மற்றும் தூதரக இந்திய பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும் உங்கள் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், தூதரகத்தில் உள்ளவர்கள் எங்கும் தப்பி செல்ல முடியாது என அச்சுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தூதராக சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் சரியான நேரத்தில் தலையிட்டு தூதரகத்திலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றினர். மேலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர், தூதரகத்திற்கு வெளியே இந்திய பத்திரிகையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khalistan group protest in Indian embassy in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->