தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியதில் இருவர் பலி.! 21 பேர் படுகாயம்.!
Lima Jorge Chavez International Airport fire accident two peoples died
தென் அமெரிக்க நாடான, பெருவின் தலைநகர் லிமாவில் உள்ள ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயராக இருந்தது.
102 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்களுடன், மேலே பறப்பதற்காக தயாரான விமானம் ஓடுபாதையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் செல்லும் பாதையில் தீயணைப்பு வாகனம் ஒன்று குறுக்கே வந்தது.
இதனால், வேகமாக வந்த விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியது. இதனால், விமானத்தில் தீப்பற்றியது. ஆனால், அந்த விமானம் நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது.
இதையறித்த பயணிகள் அனைவரும் மரண பீதியில் கூச்சலிட்டு கதறினார். ஆனால் அந்த விமானம் கரும்புகை வெளியேறியவாறு பல அடி தூரத்திற்கு சென்ற பின்னர் நின்றது. இந்த தகவலை அறிந்த விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பல மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர்.
இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் விமானம் மோதியதில் தீயணைப்பு வாகனத்தில் பயணித்த மூன்று வீரர்களில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு வீரர் மட்டும் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அதேபோன்று இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகளில் சுமார் 20 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், தீயணைப்பு வீரர் உள்பட 21 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக் குறித்து தனியார் விமான நிறுவனமும், விமான நிலைய நிர்வாகமும் தெரிவித்துள்ளதாவது, "விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் ஏன் நுழைந்தது? என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து கொலைக்கான சதியாக கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருவதாக லிமா அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
English Summary
Lima Jorge Chavez International Airport fire accident two peoples died