சிங்கத்தை சீண்டிய நபர்., அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஜமைக்கா நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், சிங்கத்தை சீண்டிய நபரின் கை விரலை சிங்கம் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜமைக்கா நாட்டின் செயின்ட் எலிசபெத் நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட உயிரினங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அப்படியாக சம்பவம் நடந்த அன்று சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்துவதற்காக, அந்த உயிரியல் பூங்காவின் ஊழியர் ஒருவர், தனது விரலை விட்டு சிங்கத்தை சீண்டிக்கொண்டே இருந்தார்.

பொறுத்துப் பார்த்த சிங்கம், சீண்டி அவரின் விரலை கொத்தாக கவ்வியது. அந்த நபர் வலியில் கத்திகொண்டே தனது விரலை மீட்க பெரும் போராட்டத்தை நடத்தினார்.

ஆனால், ஆத்திரம் கொண்ட அந்த சிங்கமோ அவரின் விரலை கடித்து துண்டித்துவிட்டது. இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lion has bitten man finger zoo in Jamaica


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->