விமானம் விபத்துக்குள்ளாகி மலாவி துணை அதிபர் மரணம் ...!!!
Malawi Vice President Died in Plane Crash
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது மலாவி என்ற நாடு. இந்த நாட்டின் துணை அதிபராக சௌலோஸ் சிலிமா என்பவர் உள்ளார். இந்நிலையில் இவர் சென்ற ராணுவ விமானம் இன்று காலை 9.17 மணிக்கு மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. மேலும் இந்த விமானத்தில் துணை அதிபருடன் மேலும் 9 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 9.17 மணிக்கு லிலோங்கில் இருந்து துணை அதிபர் உட்பட 10 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் காலை 10 மணியளவில் தரையிறங்கி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து அங்கு வானிலை மிகவும் மோசமாக இருந்ததால் தலைநகரான லிலோங்குக்கே துணை அதிபருடன் வந்த அந்த ராணுவ விமானம் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதையடுத்தே இந்த விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியை மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா முடுக்கி விட்டிருந்தார்.
இந்நிலையில் தொலைந்து போன ராணுவ விமானம் அங்குள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், மேலும் அந்த விமானத்தில் பயணித்த துணை அதிபர் சௌலோஸ் சிலிமா உள்ளிட்ட 10 பேரும் விமான விபத்தில் மரணம் அடைந்து விட்டதாகவும் மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
English Summary
Malawi Vice President Died in Plane Crash