#மலேசியா : திருமண வயது 16-ல் இருந்து 18 ஆக நிர்ணயித்து சட்டம்.!
Malaysia Marriage age fixed from 16 to 18.
மலேசியாவின் கெடா மாநில முதலமைச்சர் முஹம்மது சனூசி, மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருமணம் தொடர்புடைய திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இஸ்லாம் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ வயது 16-ல் இருந்து 18-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயதுக்குக் கீழ் திருமணம் செய்துகொள்ள அனுமதி கோருபவர்கள் இஸ்லாமிய நீதிமன்றத்தில் முன் அனுமதியைப் பெற வேண்டும்.
இஸ்லாமிய நீதிமன்ற அனுமதியின்றி ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்". என்று கெடா மாநில அரசு மசோதா திருத்தத்தை நிறைவேற்றியது.
English Summary
Malaysia Marriage age fixed from 16 to 18.