24 மாநிலங்களில் 67 கோடி மக்களின் விவரங்களைத் திருடிய பலே கில்லாடி கைது.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருபத்து நான்கு மாநிலங்கள், எட்டு மெட்ரோ நகரங்களில் உள்ள 66 கோடி 90 லட்சம் மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை சட்ட விரோதமாகத் திருடி பிறருக்கு விற்பனை செய்த நபரை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், 66 கோடியே 90 லட்சம் பேர் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிறுவனங்களின் தனிப்பட்ட, ரகசிய தகவல்களை சட்ட விரோதமாகத் திருடி விற்பனை செய்த விநாய் பகத்வாஜ் என்ற தனி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விநாய் பகத்வாஜ் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பான் கார்டு வைத்துள்ளோர், பள்ளி மாணவர்கள், டெல்லி மின்வாரியத்துறை வாடிக்கையாளர்கள், டி-மார்ட் கணக்கு வைத்துள்ளோர், நீட் மாணவர்கள், பணக்காரர்கள், இன்சூரன்ஸ் கணக்கு வைத்துள்ளோர் என்று பலருடைய தனிப்பட்ட தகவல்களை விநாயக் பகத்வாஜ் திருடியுள்ளார்.  

இவர் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் நகரில் இருந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பயர்வெப்ஸ் என்ற இணையதளம் மூலம் தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடி அதை கிளவுட் டிரைவ் லிங்க் மூலம் பிறருக்கு விற்பனை செய்துள்ளார். 

இதையடுத்து போலீசார் விநாயக் பகத்வாஜை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள், இரண்டு லேப்டாப்கள், தனிநபர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் உள்ளிட்டவை அடங்கிய கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for steal and holding and selling data of 67 crores peoples


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->