மலேசியாவில் முடிவுக்கு வந்தது கட்டாய மரண தண்டனை.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் சிறிய குற்றங்களுக்கு கூட கசையடி மற்றும் உடல் ரீதியான தண்டனை விதிக்கப்படும் நிலையில், கடத்தல், கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட 11 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனையை விதிக்கும் சட்டத்தை திருத்தம் செய்ய தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மலேசிய நாடாளுமன்றத்தில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதற்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்ததை தொடர்ந்து மரண தண்டனையை முற்றிலும் ரத்து செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக பேசிய மலேசியாவின் துணை சட்ட அமைச்சர், கடுமையான சட்டங்கள் இருந்த போதும் குற்றங்கள் குறையவில்லை என்றும், இதனால் மரண தண்டனை ரத்து செய்வதாகவும் இதன் மூலம் 1300 கைதிகளை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்ட சீர்திருத்தம் மலேசியா மற்றும் பரந்த தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் ஒரு பெரிய முன்னேற்றம் என்று மனித உரிமை காப்பகம் மற்றும் பல்வேறு குழுக்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandatory death penalty ended in malaysia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->