மீண்டும் மணிப்பூர் விவகாரமா!!! ஐநாவில் வெடிப்பு!.. இந்தியா கடும் கண்டனம்....
Manipur issue again Explosion at the UN India strongly condemns
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் வோல்கர் துர்க், காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு, இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியத்துடனும், பன்முகத்தன்மைக் கொண்டதாகவும், துடிப்பாகவும் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

அரிண்டம் பாக்சி:
இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 58 வது கூட்டத்தில் இந்திய சார்பில் பங்கேற்ற அரிண்டம் பாக்சி, " இந்தியாவின் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து துடிப்பாகவும், ஆரோக்கியமாகவும், பன்முகத்தன்மைக் கொண்டதாகவும், உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதாரமற்ற கருத்துக்கள் அடிப்படையில் இது உண்மைக்கு முரணாக உள்ளன. இந்திய மக்கள் நம்மைப் பற்றி இத்தகைய தவறான கருத்துகள் மற்றும் எண்ணங்கள் வைத்திருப்பது தவறு என்று பலமுறை நிரூபித்துள்ளனர். மேலும் இந்தியாவும், நமது பன்முகத்தன்மை மற்றும் நாகரீக நெறிமுறைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம் " எனத் தனது கருத்தை முன் வைத்தார்.
துர்க்:
மேலும் இதைத் தொடர்ந்து முன்னதாக மணிப்பூர் மற்றும் காஷ்மீர் நிலவரம் குறித்து பேசிய துர்க், "மக்கள் இடம் பெயரும் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் வன்முறையில் உறுதியான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பேசியிருந்தார். மேலும் இது தொடர்பான முயற்சிகள் பேச்சுவார்த்தை, அமைதியை நிலை நாட்டுவது மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்துப் பின்பற்றப்பட வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.
English Summary
Manipur issue again Explosion at the UN India strongly condemns