அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: மேகாலயா மக்கள் பீதி!
Meghalaya Successive earthquakes
மேகாலயாவில் நேற்றிரவு தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகாலயா, தூப்ரி பகுதியில் இன்று நண்பகல் 12.42 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக நேற்று இரவு 7.25 மணி அளவில் மேகாலயாவின் கிழக்கு மலைப்பகுதியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கங்கள் 4 ரிக்டர் வரையில் ஏற்பட்டுள்ளதால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Meghalaya Successive earthquakes