இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய மெராபி எரிமலை - பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்.!
merabi Volcano explossion in indhonesiya
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தோனேசியாவில் சுமார் நூற்று இருபதுக்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்த எரிமலைகளில் யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் 2,968 மீட்டர் உயரமுள்ள மெராபி எரிமலை நள்ளிரவு வெடித்துச் சிதறியது.
இந்த எரிமலை வெடிப்பிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும். அதேபோல், அதிலிருந்து தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல் அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பாக இந்த எரிமலை கடந்த 2010ம் ஆண்டு வெடித்த போது சுமார் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்பகுதியில் உள்ள கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
merabi Volcano explossion in indhonesiya