உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்..!
Microsoft service outage worldwide
நேற்று உலகம் முழுவதும் மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் 365 உள்ளிட்டவற்றின் சேவைகள் பல மணி நேரம் முடங்கின. இதன் காரணமாக பயனர்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும் முடியமால் போனதாக தெரிவித்தனர்.
மைக்ரோசாப்ட் சேவை பாதிப்பு உலகம் முழுவதும் இருந்த போது இந்திய பயனர்கள் தான் அதிக புகார் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயனர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மைக்ரோசாப்ட் 365 தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அந்த பதிவில்,
"நெட்வொர்க்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காணும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தாக்கம் ஏதும் இல்லாமல் இருப்பதற்காக மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Microsoft service outage worldwide