13 நாடுகளில் குரங்கு அம்மை நோய் உறுதி.. உலக சுகாதார அமைப்பு தகவல்.!!
Monkey pox in 13 Country
13 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதா உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைத்தது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை.
இதனிடையே குரங்கு அம்மை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கனடாவில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து மாசாசூசெட்ஸ் திரும்பியவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் அமெரிக்காவிலும் குரங்கு அம்மை உள்ளதை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், 13 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதா உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் குரங்கு அம்மை ஆகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.