கொரோனா தொற்று எதிரொலி.! சீன பயணிகளுக்கு தடை விதித்தது மொராக்கோ.! - Seithipunal
Seithipunal


உருமாறிய கொரோனா பி.எஃப்-7 சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து மருத்துவமனைகளும் வேகமாக நிரம்பி வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.

இதனால் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்த இந்தியா, தென் கொரியா, இத்தாலி, மலேசியா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாவது, கொரோனா தொற்று நிலைமை சீனாவில் மோசமடைந்துள்ளது. 

இதனால் மொராக்கோவில் ஒரு புதிய கொரோனா அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும், மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த நடவடிக்கையால் இரு நாட்டுக்கு இடையேயான நட்பையோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையையோ பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Morocco bans travelers from China due to increase corona


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->