எம்.பி-க்கள் 'டிக் டாக்' செயலி பயன்படுத்த தடை.. சபாநாயகர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டென்மார்க் நாடாளுமன்றத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அரசு ஊழியர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்தவும் அரசின் மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யவும் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடான டென்மார்க் நாடாளுமன்றத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் செல்போனில் டிக் டாக் செயலியை நீக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து டென்மார்க் சபாநாயகர் சோரன் கேட் தெரிவிக்கையில் நீங்கள் டிக் டாக் செயலியை அலுவலக பயன்பாட்டுக்கான செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்தால் அதை நீக்கிவிடுங்கள் என எம்பிக்கள் மற்றும் ஊழியர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP do not use tik tok in Denmark


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->