மியான்மர் நிலநடுக்கம்: பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம்!
Myanmar Earthquake update
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட உயர்தர நிலநடுக்கம், இந்த பகுதிகளை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
கட்டடங்கள் சில நொடிகளில் இடிந்து கட்டடக் குவியல்களாக மாறியதால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கை ஒலி செயல்பட்டு மக்கள் வெளியேறியதால், உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாங்காக்கில் மெட்ரோ, ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
மியான்மரில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 6.4 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு இந்தியாவின் வட மாநிலங்கள், வங்கதேசம், சீனா ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.
பாங்காக்கில் உயரமான கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியாக, 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மரில் மசூதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
English Summary
Myanmar Earthquake update