மாயமான டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல்- கடலுக்குள் சிக்கியுள்ள பிரபல தொழிலதிபர்கள்! - Seithipunal
Seithipunal


டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயமான அந்த நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது ஏப்ரல் 14ஆம் தேதி எதிர்பாராதவிதமாக அந்த கப்பல் பனிப்பாறையின் மீது மோதியது.

3 மணி நேரத்தில் அந்த கப்பல் நீரில் மூழ்கியது. இந்த கோர விபத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 1500 பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்று 110 ஆண்டுகள் ஆகிய பிறகும் கூட அந்த விபத்தை யாரும் மறக்கவில்லை. அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் கிடந்தது கண்டறியப்பட்டது.

அந்த டைட்டானிக் கப்பலை கடலுக்கு மேல் இழுத்து வர முடியவில்லை. அதனால் டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்கு சென்று ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், டைட்டானிக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்வையிட அழைத்து செல்லும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒனறு நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்து, டைட்டன் நீா்மூழ்கி என பெயரிட்டனர்.

இந்நிலையில், டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், ஓஷன்கேட் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் மற்றும் நீா்முழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நாா்கியோலே ஆகிய 5 பேருடன் அந்த டைடானிக் நீர்மூழ்கி கப்பல் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 4 கி.மீ சென்ற நிலையில் நீர்மூழ்கிக்கும், கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டிருந்த போலார் பிரின்ஸ் என்ற கப்பலுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் அந்த நீா்மூழ்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான அந்த நீா்மூழ்கியை தேடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்புபணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீா்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்கள் சுவாசிக்க 96 மணிநேரம் மட்டுமே ஆக்ஜிசன் உள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious Titanic Submarine Famous businessmen trapped in the sea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->