பாகிஸ்தான் நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது துப்பாக்கி சூடு.! - Seithipunal
Seithipunal


 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வருபவர் மார்வியா மாலிக். திருநங்கையான இவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள முதல் திருநங்கை தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

திருநங்கைகள் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்ததனால் பாதுகாப்பு கருதி அவர் லாகூரில் இருந்து வெளியேறி வேறு ஒரு இடத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். 

இதற்கிடையே, மார்வியா மாலிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சைக்காக மீண்டும் லாகூர் வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் அங்குள்ள ஒரு மருந்து கடைக்கு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் மாலிக் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய மாலிக் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mystery boys gun shoot on Pakistan's First Transgender news reader marvia malik


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->