மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றால்... பாகிஸ்தான் தொழில் அதிபர் சொன்ன செய்தி! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறை பாரத பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில் அவரது  புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. பிற நாட்டின் பிரதமர்கள் முதல், உலகின் சாமானிய குடிமக்கள் வரை அனைவரும் பிரதமர் மோடியின் ரசிகர்களாகிவிட்டனர். 

இது மட்டும் அல்லாமல், பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் ஒருவர்  பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமரானதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதை அந்த தொழில் அதிபர் பாராட்டி கூறியுள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா-பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் சஜித் தரார் இதை பற்றி பேசுகையில், "நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றது இந்தியாவுக்கு மட்டுமின்றி தெற்காசியா முழுவதும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம். பிரதமர் மோடியின் தலைமையை சாஜித் பாராட்டியுள்ளார். இந்தியாவில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தவும், சாத்தியமான உறுதியற்ற தன்மையை தடுக்கவும் பிரதமர் மோடி அவசியம்" என்று கூறினார்.

மேலும் இது குறித்து அவர் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தார் சஜித்  தரார், பிரதமர் மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கும் நல்லவர் என்று கூறினார். மோடி தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் நல்லுறவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வாழ்த்துச் செய்தி அனுப்பாதது குறித்து சஜித்  தரார் ஏமாற்றம் தெரிவித்தார்

மேலும் அவர் பேசுகையில்,"பாகிஸ்தான் சீனாவின் வக்கீலாக மாறக்கூடாது என்றும். இந்தியாவுடன் தொடர்ந்து பேச வேண்டிய அவசியம் உள்ளது என்றும். பேசினால் தான் பிரச்னைகள் தீரும். இந்த திசையில் இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார் .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narendra modi praised by Pakistan business man


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->