அப்போலோ 8 விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் விமான விபத்தில் இறந்தார்
nasa astronaut anders died in flight accident
நாசாவின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலும் முன்னாள் அப்போலோ 8 விண்வெளி வீரருமான வில்லியம் ஆண்டர்ஸ் விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சிறிய ரக விமானத்தை அவரே இயக்கிக் கொண்டிருந்தபோது, அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் விழுந்தது. வில்லியம் ஆண்டர்ஸ் 1968 இல் விண்வெளியில் இருந்து அற்புதமான 'எர்த்ரைஸ்' படத்தை எடுத்தார். வாஷிங்டனில் உள்ள சான் ஜுவான் தீவில் இந்த விமான விபத்து நடந்துள்ளது.
சான் ஜோன்ஸ் தீவின் வடக்கு முனைக்கு அருகே ஒரு பழைய மாதிரி விமானம் தண்ணீரில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வந்ததாக ஆண்டர்ஸின் மகன் கிரெக் கூறினார். விசாரணையில், ஆண்டர்ஸ் பயணித்த விமானம்தான் இது என்பது தெரியவந்தது. ஆண்டர்ஸின் மரணத்தால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
விமானத்துறையின் விசாரணையின்படி விபத்து நடந்த போது, பீச் ஏ-45 விமானத்தில் விமானி மட்டுமே இருந்தார். ஆண்டர்ஸ் விமானத்தில் தனியாக பறந்து கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து, நிர்வாகம் டைவர்ஸ் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் FAA விசாரணை நடத்தி வருகிறது.
ஆண்டர்ஸ் 1933 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி ஹாங்காங்கில் பிறந்தார். 1964 ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளித் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆண்டர்ஸ் அமெரிக்க கடற்படை அகாடமி மற்றும் விமானப்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் முன்னாள் வீரரும் ஆவார். ஆண்டர்ஸ் ஜெமினி XI மற்றும் அப்பல்லோ 11 விமானங்களில் பைலட்டாக பணியாற்றினார். அப்பல்லோ 8 இல் லூனார் மாட்யூல் பைலட்டாக பணிபுரியும் போது 6000 மணி நேரத்திற்கும் மேலாக பறந்து சாதனை படைத்துள்ளார்.
English Summary
nasa astronaut anders died in flight accident