சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு? நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!
NASA Opens Up About Sunita Williams Who Stuck in International Space Station
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸின் நிலை என்ன என்று நாசா வெளியிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சர்வதேச விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.
அங்கு அவர்கள் ஆய்வு மேற்கொண்ட பிறகு, ஜூன் 22ம் தேதி பூமிக்குத் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டது. மற்றும் அந்த விண்கலத்தின் உந்து விசைக் கருவியில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.
இதன் காரணமாக தொடர்ந்து 50 நாட்களாக விண்வெளி வீரர்கள் இருவரும் விண்வெளியில் உள்ள விண்வெளி மையத்திலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவருக்கும் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறுவதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் சிக்கியுள்ள வீரர்கள் இருவரும் தங்களது தசை மற்றும் எலும்புகளின் சக்தியை இழந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நீரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம். மேலும் எலும்பு முறிவும் ஏற்படலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தெரிவித்துள்ளது. இது நாசா ஆராய்ச்சியாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
English Summary
NASA Opens Up About Sunita Williams Who Stuck in International Space Station