ரஷ்யாவுடனான நெருக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சீனாவுக்கு நேட்டோ நாடுகள் கண்டனம்.!
NATO condemnes China over Russia realtions
ரஷ்யாவுடனான நெருக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சீனாவுக்கு நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் சீனா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது. சீனாவின் ரஷ்யாவுடனான நெருக்கம் மேற்கத்திய மற்றும் நேட்டோ நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் மூன்று நாட்கள் நடைபெற்ற நேட்டோ மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் மாநாட்டின் முடிவில் சீனாவின் செயல்பாடுகள் நேட்டோ அமைப்பிற்கு எதிராக இருப்பதாகவும், நேட்டோ நாடுகளின் மதிப்பீடுகளுக்கும், பாதுகாப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக நேட்டோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் ரஷ்யாவுடனான செயல்பாடுகளுக்கு நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary
NATO condemnes China over Russia realtions