உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்.! பல்கேரியாவில் நேட்டோ படைகள் தற்காப்பு பயிற்சி.!
NATO forces exercise in Bulgaria as Russia intensify attack on ukraine
நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியதற்காக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்ற வரும் நிலையில், ரஷ்யா தீவிரமாக உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து உதவி வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவில் நேட்டோ அமைப்பின் ராணுவ பயிற்சியை இத்தாலி முன் நின்று நடத்தியுள்ளது. இந்த பயிற்சியில் இத்தாலி தரைப்படை ராணுவத்தின் முக்கிய போர் வாகனங்கள் இடம்பெற்றன.
மேலும் அமெரிக்கா, வடக்கு மாசிடோனியா, அல்பேனியா, கிரீஸ், மாண்டிநீக்ரோ போன்ற நாடுகளும் பல்கேரியாவில் நடைபெற்ற பயிற்சியில் பங்கு பெற்று தற்காப்பு பயிற்சியை மேற்கொண்டனர். ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளிலும் நேட்டோ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உக்ரைன் போர் தொடங்கியதற்கு பின்னர் கடந்த அக்டோபர் மாதம் முதல் நேட்டோபடைகள் பல்கேரியாவில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
NATO forces exercise in Bulgaria as Russia intensify attack on ukraine