நேட்டோவின் கதவு திறந்தே இருக்கிறது.! ஒரு நாள் உக்ரைனும் உறுப்பினராகும் - நேட்டோ பொதுசெயலாளர் உறுதி
NATO Secretary General assured One day Ukraine will become a NATO member
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விரும்பிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது போரை தொடங்கியது.
இப்போரில் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ருமேனியா, நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்பொழுது நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பத்திரிகையாளர்களிடம், நேட்டோவின் கதவு திறந்தே இருக்கிறது. இந்த அமைப்பில் சேர விரும்பும் நாடுகளை தடுக்கும் அதிகாரம் ரஷ்யாவுக்கு இல்லை என்றார்.
மேலும் உக்ரைனை உறுப்பினராக சேர்ப்பதில் நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். ஒரு நாள் உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பினராகிவிடும் என்றும், அதுவரை போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை ஆதரிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
NATO Secretary General assured One day Ukraine will become a NATO member